தமிழகத்தில் அடுத்த 2020-ம் ஆண்டில் 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட அரசா ணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள அனைத்து அலு வலகங்களும் அடுத்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக, அந்த ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்பட வேண் டும். மேலும், ஞாயிற்றுக்கிழமை களுடன், 23 நாட்களும் பொது விடுமுறை நாட்களாக கொள்ளப் படும். அடுத்தாண்டில், குடியரசு தினம், மொகரம், ஆயுதபூஜை ஆகிய முக்கிய தினங்கள் ஞாயிற் றுக்கிழமைகளிலும் சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி புதன்கிழமை என்பதால், அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. புனிதவெள்ளி, மேதினம், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை அமையும். மகாவீர் ஜெயந்தி, ரம்ஜான், விஜயதசமி ஆகியவை திங்கள்கிழமைகளில் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட் கள் விடுமுறை அமைந்துள்ளது.