JACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் வேண்டுகோள்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும், வேலைநிறுத்த முடிவை கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ‘ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும், என்றார்.