G.O (1D) No.500 DT: August 22, 2017 – வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் – 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் – ஆணை
G.O (1D) No.500 DT: August 22, 2017 – வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் – 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது | மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் நீலோபர் கபீல் அவர்களால் 13.07.2017 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 22.08.2017-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22.08.2017 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் 21.11.2017-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் டாக்டர்.என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.