
சென்னை: இன்ஜினியரிங், ஆன்லைன் கவுன்சிலிங், செப்., 7ல் துவங்க உள்ளது.
இதற்கான அட்டவணை, உயர் கல்வித் துறையில் இருந்து, லீக் ஆகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, உயர்கல்வித் துறையின் மாணவர் சேர்க்கை கமிட்டி திட்டமிட்டுள்ள கவுன்சிலிங் நடைமுறைக்கான கால அட்டவணை, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, &’வாட்ஸ் ஆப்&’ செயலி வாயிலாக நேற்று லீக் ஆனது.
www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆக.,24ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
கால அட்டவணைவிண்ணப்ப பதிவு துவக்கம் – ஜூலை 26
விண்ணப்ப பதிவுக்கு கடைசி நாள் – ஆக., 24
ரேண்டம் எண் ஒதுக்கீடு – ஆக., 25
தரவரிசை பட்டியல் வெளியீடு – செப்., 4
சிறப்பு பிரிவு கவுன்சிலிங் துவக்கம் – செப்., 7
சிறப்பு பிரிவு கவுன்சிலிங் முடிவு – செப்., 11
பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம் – செப்., 14
பொது பிரிவு கவுன்சிலிங் முடிவு – அக்., 16
பட்டியலினத்தவர் காலியிட கவுன்சிலிங் – அக்., 18
இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு – அக்., 20