
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க மூன்று நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 26ம் தேதி துவங்கியது. முதல் நாளில் 25 ஆயிரம் பேர்; இரண்டாம் நாள் நிறைவில் 41 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர்.
நேற்று மூன்றாம் நாள் நிறைவில் 57 ஆயிரத்து 513 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 33 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 23 ஆயிரம் பேர் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளதாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.