ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது.சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையானது குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை, சுயநிதிக் கல்லூரிகளில் ரூ.70 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளஅதேசமயத்தில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பி.இ., பி-டெக்., பி-ஆர்க் படிப்பில் தரச்சான்று பெறாத சுய நிதிக் கல்லூரிகளில் ரூ.70 ஆயிரமாக இருந்த கல்விக் கட்டணம்,இந்த ஆண்டு ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தகட்டண மாற்றமும், உதவித்தொகை குறைப்பும், ஆதி திராவிடத் துறை அதிகாரிகளையோ அல்லது ஆதி திராவிட மக்களையோ கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.