
தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக் | புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் கடந்த11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் பொதுக்குழுகூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜாக்டோ – ஜியோ அமைப்பின்கோரிக்கைகளுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில்ஈடுபட வேண்டும் என்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவுஎடுக்கப்பட்டது.அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்றுபணியின்போது கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதேசமயம், இந்த சங்கத்தின் ஒருபிரிவினர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.