மத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் சென்னையில்வேலைவாய்ப்பு முகாம் 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு | மத்தியதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம்மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து சென்னையில்இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதுதொடர்பாக சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மைய அதிகாரி பரமேஸ்வர், மத்தியவேலைவாய்ப்புத் துறை அதிகாரி எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் நேற்று கூறியதாவது:சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகவளாகத்தில் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இளநிலை,முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புபயின் றோர் பங்கேற்கலாம். முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குவேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிஇலவசம். முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக முகாம்நடைபெறும் இடத்துக்கு வந்து பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். எனவே, இந்தவாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம் தொடர்பானகூடுதல் விவரங்களுக்கு 044-22500540, 22500560 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Stories
December 2, 2024