இணை கமிஷனர் மனோகரன் உள்ளிட்ட 23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது | குடியரசு தின விழாவையொட்டி சென்னை இணை போலீஸ் கமிஷனர் மனோகரன் உள்ளிட்ட 23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் துறையில் 23 அதிகாரிகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கண்ட விருதுகள் அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படுகின்றன. காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்கான இந்திய குடியரசுத் தலைவரின் காவல் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. விருது பெறும் அதிகாரிகளின் விவரம் வருமாறு:-

1) ராஜீவ்குமார் – கூடுதல் டி.ஜி.பி. நலப்பிரிவு, சென்னை.

2) எஸ்.மனோகரன் – சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர்.
3) அ.ராதிகா – போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு (மேற்கு சரகம்).
4) லலிதா லட்சுமி – போலீஸ் சூப்பிரண்டு, பொருளாதார குற்றப்பிரிவு, ன்னை.
5) மல்லிகா – துணை கமிஷனர், சென்னை மத்திய குற்றப்பிரிவு.
6) சாமுண்டீஸ்வரி – போலீஸ் சூப்பிரண்டு, தமிழ்நாடு காவல் பயிற்சியகம், சென்னை.
7) லட்சுமி – துணை கமிஷனர், கோவை சட்டம்-ஒழுங்கு பிரிவு.
8) இளங்கோ – கூடுதல் சூப்பிரண்டு, லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை.
9) மோகன்ராஜ் – கூடுதல் சூப்பிரண்டு, காவலர் பயிற்சி பள்ளி, ஆவடி.
10) ராஜேந்திரன் – கூடுதல் சூப்பிரண்டு, தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறை, சென்னை.
11) செல்வன் – சென்னை தியாகராயநகர் உதவி கமிஷனர்.
12) சுப்பராயன் – சென்னை தரமணி உதவி கமிஷனர்.
13) ஹெக்டர் தர்மராஜ் – துணை சூப்பிரண்டு, லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு, நாகர்கோவில்.
14) ராமச்சந்திரமூர்த்தி – இன்ஸ்பெக்டர், லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை.
15) அருளரசு ஜஸ்டின் – இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.
16) குமாரவேலு – இன்ஸ்பெக்டர், லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை.
17) பாஸ்கரன் – இன்ஸ்பெக்டர், லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை.
18) மோகன்குமார் – சப்-இன்ஸ்பெக்டர், முதல்-அமைச்சர் பாதுகாப்பு பிரிவு, சென்னை.
19) வேணுகுமரன் – சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், மாநில குற்ற ஆவணக்காப்பகம், சென்னை.
20) செல்வராஜூ – சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு, கோவை.
21) ரவி – சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, நீலகிரி.
22) மதிவேந்தன் – சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை.
23) வெங்கடசரவணன் – தலைமை காவலர், சென்னை நீலாங்கரை போலீஸ் நிலையம்.
குடியரசு தின விழாவில் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அந்தந்த துறைகள் சார்பில் வெளியிடப்பட்டன. அதன்படி, ஜனாதிபதியிடம் இருந்து காவல் பதக்கம் பெறும் சி.பி.ஐ. அதிகாரிகளின் பட்டியலை சி.பி.ஐ. நேற்று வெளியிட்டது. இதில் 6 பேர் தனித்திறன் அடிப்படையிலும், 21 பேர் சிறந்த பணித்திறன் அடிப்படையிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சென்னை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஒய்.ராமகிருஷ்ணன், சிறந்த பணித்திறன் அடிப்படையில் இடம் பிடித்துள்ளார்.