அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம் | கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் சான்றிதழ் பெறாமல் உள்ளனர். இப்படி நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முகாமை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவ்வப்போது நடத்துகிறது. தற்போது மூன்றாவது முறையாக நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம் வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுவரை தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் பெறாதவர்கள், படிப்பை நிறைவு செய்து பட்டச் சான்றிதழ் பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். நிலுவைத் தொகையிருந்தால் அதை செலுத்தி சான்றிதழ் பெறலாம். முகாமில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர் சேர்க்கை, பாடங்கள், பயிற்சி முகாம்கள் பற்றிய விவரங்களையும் கேட்டுப் பெறலாம்.
Related Stories
December 2, 2024