பள்ளிக்கல்வித் துறையில் 4 இணை இயக்குனர்கள் மாற்றம் | தமிழக பள்ளிக்கல்வித்துறை மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் உமா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பணிபுரிந்த இணை இயக்குனர் வாசு பள்ளிக்கல்வித் துறையில் உள்ள நாட்டுநலப்பணி திட்டத்திற்கு மாற்றப்பட்டார். நாட்டுநலப்பணி திட்ட இணை இயக்குனர் செல்வக்குமார் மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக பதவி ஏற்கிறார். அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் பள்ளிக்கல்வித் துறை மேல்நிலை கல்வி இணை இயக்குனராக பதவி ஏற்கிறார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ளார்.