88 இல் நான் பணியில் சேர்ந்த போது ₹610 மட்டுமே ஊதியம். ஒரு மிதிவண்டி வாங்க கூட கடனில் தான் வாங்க வேண்டிய நிலை. நான் பணி புரிந்த அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூர் பள்ளிக்கு வீட்டில் இருந்து பேரூந்து நிலையத்திற்கு ஒரு கி.மீ தூரம்
நடந்து வந்து பின் பேரூந்தில் கீழப்பழுவூர் வந்து அங்கு இருந்து பேரூந்து இல்லையெனில் சிமெண்ட் ஆலைக்குக்கல் ஏற்றிச்செல்லும் லாரியில் ஏற முடியாமல் ஏறி புதுப்பாளையம் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து 9.10 மணிக்குள் சிறுவளூர் ஊ.ஒ.து.பள்ளிக்கு சென்று.மாலை அதே போல் இரண்டு கிலோமீட்டர் நடந்து லாரி அல்லது பேரூந்தில் ஏறி கைகாட்டி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து அரியலூருக்கு வர வேண்டும்.
தாமதமாக எப்போதும் சென்றதில்லை…அந்த ஊரில் கடைகள் எதுவும் கிடையாது என்பதால்…. மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மக்களுக்கு தேவையான மருந்துகள் வாங்கிச் செல்வது வழக்கம்.
கிராமத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் நிலை மிகக் கொடுமை.
மழையூரில் பணி புரிந்த போது கழிப்பறை இன்றி வீடு வீடாக சென்று கொடுமை.
ஆசிரியர்கள் போராட்டத்தால் ஊதிய உயர்வு கிடைத்தது என்பது உண்மை.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் ஊ.ஒ..பள்ளிகள் பஞ்சாயத்து கீழ் வருவதை தடுக்க தில்லியில் ஜந்தர் மந்திர் என்ற இடத்தில் 1993 இல் நடந்த போராட்டத்தில் மாண்புமிகு நரசிம்ம ராவ் அவர்கள் ஆட்சியில் கண்ணீர் புகை க்குண்டு வீசிய போதும், இந்தியா முழுவதும் திரண்ட ஆசிரியர்கள் கொதித்து எழுந்து போராடி வெற்றி பெற்றோம்…
இன்னும் தில்லி ஜந்தர் மந்திர் போராட்டத்தின் போது அடைத்து வைத்த கதவை உடைத்து எறிந்து சென்ற போராட்ட வீரர்கள் கண்ணீர் புகைக்குண்டுக்கு பயப்படாமல் முன்னேறிய காட்சி அடிக்கடி கண்முன் தோன்றும்.
எங்கள் முன்னோர்கள் போராடி பெற்ற பலன்களை இழந்து விடக்கூடாது என்ற உண்மையான தவிப்பில் களம் இறங்கி உள்ளோம் GPF இல் உள்ளவர்கள் CPS ஆல் பாதிக்க பட்ட சகோதர சகோதரிகளுக்காக…
சகோதரர் வைகறை இறந்த பொழுது அந்த குடும்பம் எந்த வித வருவாயும் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய என்ன பாடுபட்டோம் என்று எங்களுக்கு தான் தெரியும்.
6 வயது சிறுவன் தன் தந்தையை இழந்து பொருளாதாரமும் இல்லாமல் அவர் மனைவி எப்படி துடித்திருப்பார்.
இது போல் எத்தனை சகோதர சகோதரிகள் துயரத்தில் உள்ளனர்.
ஐந்து வருடங்கள் மட்டுமே பதவியில் இருந்து தமிழ் நாட்டை சுரண்டி சேர்க்கும் எம்.எல்.ஏ., எம்.பிக்கு ஊதிய உயர்வு ஓய்வூதியம் வழங்கும் பொழுது…
ஆசிரியர்கள் எந்த விதத்தில் குறைந்து போனார்கள்….
சமூகப் பிரச்சினைகளுக்கு போராடவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு.இருந்தாலும் இன்று அவர்கள் ஊதியத்தில் பிடித்து வைத்து உள்ள 16000 கோடி ரூபாய் எங்கே என்று கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு….
ஆசிரியர்களைக்குறை கூற நினைப்பவர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு கூறுங்கள்…
இதோ இன்று நீட் தேர்வு எதிர்ப்பு க்குரல் எழுப்பி உள்ளனர்…..
இனி சமூகத்திற்காக போராடவும் களம் இறங்குவார்கள்…..
ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும்….நீட் தேர்வு அழியட்டும்