தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் அமுதினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 பணிக்கானதேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன்.
ஆனாலும் நேர்முகத்தேர்வுக்கு என்னை அழைக்கவில்லை. காரணம் கேட்டபோது, விண்ணப்பத்தில் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கவனக்குறைவால் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுவிட்டேன். எனவே, என்னை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ‘மனுதாரர் தனது கவனக்குறைவால் தான் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவரை நேர்முகத்தேர்வில் அனுமதிக்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்
TNPSC – தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்லசென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Leave a Reply
You must be logged in to post a comment.