​​9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரத்து 351 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 301 தாலுகா மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 20 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளங்களில் ( www.tnpsc.ex-ams.netwww.tnpsexams.in) வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது விண்ணப்பம் நிராகரிக்கபட்ட காரணம் தெரிய வரும். சரியான முறையில் விண்ணப்பித்து, பணம் செலுத்தியும், ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான செல்லான் நகலுடன் விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டண ரூபாய், செலுத்திய அஞ்சலக முகவரி அல்லது வங்கி, வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி, பணபரிமாற்ற ஐ.டி. மற்றும் தேதி ஆகியவற்றை தேர்வாணைய மின் அஞ்சல் முகவரிக்கு (contacttnpsc@gmail.com) பிப்ரவரி 6-ந்தேதிக்குள் அனுப்பவும். இந்த தகவலை அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.