TN Forest Exam Hall Ticket Published | தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கான இணைய வழி தேர்வு வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இணைய வழி தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ (நுழைவுச்சீட்டு) 21-ந் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வு குழும இணையதளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விபரங்களை, www.forests.tn.gov.in மற்றும், https://tnfusrc.in/ என்ற, இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, வனத்துறை அறிவித்துள்ளது.