பொதுத்தேர்வு பணிகளை முடிப்பதற்காக, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவிக்கு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில், அரசு தேர்வு துறையின் இயக்குனராக, வசுந்தரா தேவி, நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இவரது பணிக்காலம், மார்ச், 31ல் முடிவதாக இருந்தது. அவரது ஓய்வுக்கு பின், புதிய இயக்குனரை நியமிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.
ஆனால், வசுந்தரா தேவிக்கு, மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, பொது தேர்வுகள் நடக்கின்றன. லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்க உள்ளது.
அதற்கு முன், பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த வேண்டும். தேர்தலுக்கு மறுநாள், பிளஸ் 2 ரிசல்ட் வெளியிட வேண்டியுள்ளது.
இந்த நெருக்கடியில், புதிய இயக்குனரை நியமித்தால், பணிகளில் நெருக்கடி ஏற்படும் என, அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்தே, வசுந்தரா தேவிக்கு, மூன்று மாதம், பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.