ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவக்கி உள்ளனர். செப்., 7 முதல் போராட்டம் துவங்கி உள்ளது.
உயர் நீதிமன்ற தடை, அரசின் அறிவுரையை மீறி, போராட்டம் தொடரும் என, ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ளது.இதனால், பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவது பாதிக்கப்படாமல், மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில், சத்துணவு வழங்கப்படுவது பாதிக்கக்கூடாது என, தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.காலாண்டு தேர்வில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வியியல் கல்லுாரி மாணவர்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பி.எட்., படிக்கும் மாணவ மாணவியர், பள்ளி களுக்கு சென்று, பாடம் எடுக்க, தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யவும், வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.