பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்ட மிட்டபடி ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ல் முடிவடைந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ-மாணவி யர், தனித்தேர்வர்கள் தேர்வெழு தியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 20-ம் தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 75-க்கும் மேற்பட்ட மையங்களில் ஏறத்தாழ 45,000 முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டனர். முன்கூட்டியே அறிவிப்பு பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கு வதற்கு முன்பாக தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் பணி, ஏப்ரல் 19-ம் தேதி புனித வெள் ளிக்கிழமையாக இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றியமைக்கப்படலாம் என்று சந்தேகம் மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்தது. எனினும் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை சார்பில் அவ்வப் போது விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத் துறை மீண்டும் அதிகாரப்பூர்வமாக ஓர் அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த ஆய்வை (அனலிசிஸ்) தேர்வுத் துறையின் இணையதளத்தில் ஏப்ரல் 19-ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9.30 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள், தேர்ச்சி விவரங்கள் அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் வெளியிடப்படுவது இல்லை. தேர்வு முடிவுகள் அடங்கிய விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறுஞ்செய்தியில் முடிவுகள் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வெழுதிய அனைத்து மாணவ-மாணவியரின் செல்போன் எண் ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடமும் 200 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்டது. அதோடு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வுகள் முன்பு போல 2 தாள்களாக இல்லாமல் ஒரே தாளாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.