தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தில், வரும் கல்வியாண்டில் புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.நாகையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் எனவும், புதிதாக துவக்கப்பட்ட ஓரடியம்புலம் மீன்வளக் கல்லுாரி, தமிழ்நாடு டாக்டர், எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் எனவும் பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, மீன்வள பல்கலைக் கழகத்தில், பி.எப்.எஸ்.சி., பாடப் பிரிவில், 140 பேர், பி.இ., – 20, எம்.எப்.எஸ்.சி., – 61, பி.எச்.டி., பிரிவில், 35 பேர் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல், நான்காண்டு – இளநிலை பிரிவில், பி.எப்.எஸ்.சி., கடல் அறிவியல், மீன் வணிக மேலாண்மை, பி.டெக்., உணவு தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துவக்கப்பட உள்ளன.
இரண்டாண்டு – முதுநிலை பிரிவில், எம்.எப்.எஸ்.சி., ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பம், உடலியல் மற்றும் உயிர் வேதியியல், எம்.எஸ்.சி., மரைன் உயிர் தொழில்நுட்பம் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளதாகவும், துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்தார்.