நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம்சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக உடுமலையை சேர்ந்த கிருத்திகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதாவது, நீட்டுக்கு எதிராக அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்கள் எத்தனை?
மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? மாணவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதா?
எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? தனியார் அமைப்புகள் ஏதும் நீட்டுக்கு எதிராக போராட தூண்டியுள்ளதா?
வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூடாதா?நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை? என சரமாரியாக பல்வேறு கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.மேலும் இத்தகைய கேள்விகளுக்கு நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.