அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்வு எழுத செப்டம்பர் 14ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது, விண்ணப்பிக்கும் தேதி 18ம் தேதி மாலை வரை நீட்டிக்கப்படுகிறது. இதை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.