கோபி அருகே உள்ள கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது

அடுத்து ஆண்டு முதல் பள்ளி தொடங்கிய 15 நாட்களிலேயே மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்

மாணவர்கள் வருகையை கண்காணிக்க வெளிநாடுகளில் உள்ளது போன்று கேமரா மூலம் வருகை பதிவேடு பதிவு செய்யப்படும்

மாணவர்கள் வரும்போதே அவர்கள் முகத்தை கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களது வருகை பதிவு செய்யப்படும்

கடந்த ஒரு ஆண்டில் 250 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயர்நிலைப்பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது

அதே போன்று சீருடைகள் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சீருடை மாற்றம் செய்யப்பட உள்ளது

ஜனவரி முதல் அனைத்து நடுநிலைப்பள்ளியிலும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.