கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது.எனவே 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களின் விவரங்கள், பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கிலே இந்த ஊக்கத்தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது.