
மின்வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | தமிழக மின்வாரியம் 325 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான (எலக்ட்ரிக்கல் – 300, சிவில் – 25) எழுத்து தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 28-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மின்வாரிய இணையதளத்தில் வேக குறைபாடு காரணமாக விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கால அவகாசத்தை வரும் 6-ம் தேதி வரை நீட்டித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 6-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு 9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.