10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை சி.பி.எஸ். இ. வெளியிட்டுள்ளது.
இதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
முதன் முறையாக தேர்வு தொடங்குவதற்கு 86 நாட்களுக்கு முன்னரே Date Sheet எனப்படும் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த முறை 23 நாட்களுக்கு முன்னரே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்இ தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வும் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும், முன்கூட்டியே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் இன்றி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10- ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பின்வருமாறு-