![](http://tnkalvi.in/wp-content/uploads/2017/08/general-news-tnkalvi.jpg)
தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது. இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 – 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.