அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க பழகுநர் உரிமம்(எல்.எல்.ஆர்.,) இருந்தாலே போதும், என திருத்தம் செய்யப்பட்ட நிலையில், பிப்.,24ல் மகளிருக்கு அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெ., தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு 50 சதவீத மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும், என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற, எட்டாவது படித்த, ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கும் குறைவான மகளிர் இத்திட்டத்திற்கு தகுதியானவர்.
இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டாலும், பழகுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், என விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்
பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.இந்த நிலையில், நடப்பு ஆண்டில் மார்ச் 31 வரை தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வாகன மதிப்பில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய். இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். ஜெ., பிறந்த நாளான பிப்.,24ல் அம்மா இருசக்கர வாகனம் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.