
3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது | அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும், கட் ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) தெரிந்துகொள்ளலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக கட் ஆப் மதிப்பெண் விவரம் வருமாறு:- ஓசி – 77.781 பிசி – 71.670 பிசி (முஸ்லிம்) – 69.200 எம்பிசி, டிஎன்சி – 70.247 எஸ்சி (அருந்ததியர்) – 64 எஸ்சி – 69.917 எஸ்டி – 60.347 கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதியும், எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெறும்.