நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
யுஜிசி (UGC )பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆய்வில் தகவல்
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்க்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் பல்கலைக்கழக மானியக் குழுவால் நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் அதிகம் கொண்ட உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் இந்திய அளவில் 4 இடத்தில் உள்ளது.
அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக யுஜிசி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சராசரியில் தமிழகம் 50 சதவிகிதத்துடன் முதலிடம் வகிக்த்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்கள் என மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.