பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கி, ஏப்., 20ல் முடிகிறது.
இந்த தேர்வில், 10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, வரும், 20 முதல், 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்