Exam Notification, Kalvi News

பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14 – ல் வெளியீடு : தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 4 – ந்தேதி தொடங்கிய பிளஸ் – 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற
26 – ந்தேதி வரை நடைபெற உள்ளது . இதில் தனித்தேர்வர்கள் , மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 1 – ம் தேதி முதல் 13 ந்தேதி வரை நடத்தப்பட்டு இதற்கான முடிவுகள் 24 – ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

வழக்கமான மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15 – ந்தேதி முதல் 25 – ந்தேதி வரை நடைபெற உள்ளது . இவர்களுக்கான தேர்வு முடிவு மே மாதம் 14 – ந்தேதி வெளியிடப்படுகிறது . விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Theme by Anders Norén