பாலிடெக்னிக் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு | அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், இணை பேராசிரியர் கள் மற்றும் உதவி பேராசிரியர் களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்று புதிய கல்லூரியை தேர்வுசெய்த ஆசிரியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதலுக் கான உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பாலி டெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பாலிடெக்னிக்குகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.