
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (13.12.2017) கடைசி நாள் | தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை அந்தந்த துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி, ஆட்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு கொடுத்துவிடுகிறது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வை நடத்த அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்து கடந்த (நவம்பர்) மாதம் 14-ந்தேதி அறிவித்தது. அதன்படி இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன் கிழமை) கடைசி நாள். தேர்வுக்கட்டணம் செலுத்த வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.