தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை திருநெல்வேலியில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக, கேரளாவில் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட் களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 22 லாரிகள் மூலம் அமைச் சர் செங்கோட்டையன் கொடி யசைத்து அனுப்பி வைத்தார். விடுமுறை நாட்களில் பயிற்சி பின்னர் அவர் கூறியதாவது: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. இருப்பினும், நீதிமன்ற உத்தரவால் நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, தமிழகம் முழு வதும் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் படு கிறது. இந்த மையங்கள் வெள்ளிக் கிழமை முதல் செயல்படத் தொடங்கின. விடுமுறை நாட்களில் காலை, மாலையில் 3 மணி நேரம் இங்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பள்ளி முடிந்ததும் மாலை நேரங்களிலும் பயிற்சி வகுப்பு நடத்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பயிற்சி அளிக்க உள்ளனர். 1,000 பள்ளிகள் தயார் கடந்த ஆண்டு 1,472 அரசுப் பள்ளி மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 24 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்தது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்காவது மருத்துவக் கல்வி யில் சேர இடம் கிடைக்கும் நிலை உருவாக்கப்படும். பிளஸ் 1 பாடத்திட்டம் சிபிஎஸ்இக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் டேப் மூலம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். பெண் ஆசிரியர்கள் பாலி யல் ரீதியான பிரச்சினைகளுக்கு 14417 என்ற இலவச தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர் குறித்த விவரங் கள் பற்றி ரகசியம் காக்கப்படும் என்றார்.