ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போட்டித் தேர்வு நடைபெறும் தேதி, காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.