- LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019
- இணைய முகவரி : www.licindia.in
எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி பயிற்சிப் பணிகள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி பயிற்சி பணிகளுக்கு 8 ஆயிரத்து 581 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இதில் டெவலப்மென்ட் ஆபீசர் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 581 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலம் வாரியாக சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு மண்டலத்தில் 1257 இடங்கள், மத்திய மண்டலத்தில் 525 இடங்கள், கிழக்கு மண்டலத்தில் 922 இடங்கள், கிழக்கு மத்திய மண்டலத்தில் 701 இடங்கள், தெற்கு மத்திய மண்டலத்தில் 1251 இடங்கள், வடக்கு மண்டலத்தில் 1130 இடங்கள், வடக்கு மத்திய மண்டலத்தில் 1042 இடங்கள், மேற்கு மண்டலத்தில் 1753 இடங்கள் உள்ளன. இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்… வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் மே 1-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ், ஏதேனும் ஒரு கல்விப் பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ம் மற்றவர்கள், ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜூன் 9-ந் தேதியாகும். இந்த பணிகளுக்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஜூலை 6 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மை தேர்வு ஆகஸ்டு 10-ந் தேதி நடைபெறும். விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.licindia.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.