எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்களுக்கு இன்றுமுதல் ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் | எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) இன்றுமுதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கால் தேர்வர்கள் உட்பட) தங்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) பிற்பகல் முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதி விறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார் கள். அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையை அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.