போலீஸ் துறையில், 969 சப் – இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு, 2020 ஜனவரியில் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டனர்; 5,275 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், அதை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரியும், உயர் நீதிமன்றத்தில், சமூக சேவகர், ‘டிராபிக்’ ராமசாமி, மனு தாக்கல் செய்தார்.மனுவில், ‘தேர்வில், ஒருவரை ஒருவர் பார்த்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டது; அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை; மொபைல் போன் அனுமதிக்கப்பட்டது’ என, கூறப்பட்டது.
மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும் படி, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், டி.ஜி.பி., தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, செப்., 30க்கு தள்ளி வைத்தனர்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..