தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடந்தது. அதில் 24 ஆயிரத்து 362 பேர் எழுதினர். தேர்வுக்கு பிறகு 203 மாணவ, மாணவியர் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர். இதன்பேரில் 1179 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டதில் 4 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல் www.dge.tn.gov.in இணைய தளத்தில் நாளை பிற்பகல் வெளியிடப்படும்