மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின்கீழ் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதியும், மூன்றாண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரமும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறைகளை ஆன்லைன் முறையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, 2018 மே மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண் 101-இல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது ஆவணங்களைச் சரிபார்த்து தொடர் அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.