2020 ம் ஆண்டு மே 3 ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனவும், ஜூன் 4 ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2 ம் தேதி முதல் டிசம்பர் 31 ம் தேதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 -ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் .2020-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்விற்காக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மார்ச் 27-ஆம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.