2018 டிசம்பர் 5-6
” 2018 டிசம்பர் 5 அன்று, உலக மண் தினம் (World Soil Day) ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் கழகத்தால் கடைபிடிக்கப்பட்டது.
” உலக அறிவு சார் சொத்துரிமை கழகத்தின் அறிக்கைப்படி, 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 12,387 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2016-ஆம் ஆண்டின் 8,248 காப்புரிமைகளை விட 50 சதவிகிதம் அதிகமாகும்.
” ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு FIFA வின் சார்பில் வழங்கப்படும் பாலென் டிஆர் (Ballond’or) விருது 2018-ஆம் ஆண்டில் குரோஷிய வீரர் லுகாமேட்ரிச்சுக்கு 2018 டிசம்பரில் வழங்கப்பட்டது.
” சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி – 2018 ஆனது, சீனாவில் நடைபெற்றது. இப்போட்டிகளின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணி வெல்லும் 7-ஆவது சர்வதேச சாம்பியன் பட்டம் ஆகும்.
” இந்திய – ஜப்பானிய விமானப்படைகள் கலந்து கொள்ளும் ஷின்யுமைத்ரி – 18 (Shinyu Maitry-18) எனும் இருதரப்பு கூட்டு விமானப்படை பயிற்சி ஒத்திகை 2018 டிசம்பர் 03 முதல் 07 வரை ஆக்ரா நகரில் நடைபெற்றது. இதன் மையக்கருத்து – HADR – Mobility/Humanitarian Assistance and Diaster Relief என்பதாகும்.
” அமெரிக்கா – கனடா – மெக்ஸிகோ இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமான NAFTA விற்கு (North American Free Trade Agreement) பதிலாக USMCA (US – Mexico – Canada Agreement)) எனும் புதிய தடைற்ற வர்த்தக ஒப்பந்தம் 2018 டிசம்பரில் கையெழுத்தானது.
” இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணையதள சேவையை வழங்கும் நோக்கில் ஜிசாட் – 11 எனும் செயற்கைக் கோள் 2018 டிசம்பர் 5 அன்று பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியான்-5 இராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
” 2018-ஆம் ஆண்டின் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதெமி விருது, ’சஞ்சாரம்’ எனும் நாவலுக்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படும் என 2018 டிசம்பர் 5 அன்று அறிவிக்கப்பட்டது.
” இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே தண்டனைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம், 2018 டிசம்பரில் கையெழுத்தானது.
” பருவகால மாற்றம் குறித்த ஐ.நா. உச்சிமாநாடு 2018 டிசம்பர் 3 முதல் 14 வரை போலாந்து நாட்டின் கடோவிஸ் (Katowice) நகரில்நடைபெறுகின்றது.
” 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 2018-ஆம் ஆண்டின் உலகக்கோப்பை கால்பந்துபோட்டி உருகுவேவில் நடைபெற்றது. இதில் மெக்ஸிகோ அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
” 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் 2018-டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.