குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பொறியியல் சேவைகளுக்கான முதன்மைத் தேர்வு, பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறுகிறது.
மேலும், குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 22-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், பிரதானத் தேர்வு, செப்டம்பர் 16-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.