மத்திய அரசு தேர்வாணையம்(யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸஸ் 2021 தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுளளது. ஆணையத்தின் www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தில் காணலாம்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மை (Mains Examination) தேர்வு, ஏப்ரல் முதல் மே வரையில் நடத்திய நேர்முகத் தேர்வு (Personality Interview) அடிப்படையில் இந்த இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுளளது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கு மொத்தம் 685 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
126 பேர்இருப்புப் பட்டியலில் (Reserved Candidates) வைக்கப்பட்டுள்ளனர் (சிவில் சர்வீஸ் தேர்வு விதிகள் எண் -16 (4) & (5)_க்கு இணங்க). இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் தேர்வாகி, பதவிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த பட்டியல் பராமரிக்கப்படுகிறது.
80 பேர் இரண்டாவது இருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
UPSC declares CivilServices 2021 Final Result.685 candidates recommended for appointment.