சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. நேற்று மாலை முதல் சிபிஎஸ்இ 12ம் வகுப்பின் கணக்கு பதிவியல் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தன.
இதனையடுத்து சிபிஎஸ்இ 12வது வகுப்பின் கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக்கான விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள வினாத்தாள்கள் முத்திரையுடனே காணப்பட்டன என்று கூறியுள்ளது.