தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள முதுகலை மற்றும் இளங்கலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூவலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 19
பதவி: Senior Technical Assistant – 05
சம்பளம்: மாதம் ரூ.36,400 – 1,15,700
பதவி: Junior Technical Assistant -14
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.
தகுதி: ஜவுளித் தொழில்நுட்பத் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.150, ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் ரூ.150 மட்டும் ஆன்லன் மூலம் செலுத்தினால் போதும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 08.02.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_03_Notifyn_Senior_Junior_Tech_Asst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6-2-2019