
பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் 13.11.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் | பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது: கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடந்த பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை (நவம்பர் 13) பிற்பகல் முதல் scan.tndge.in என்ற இணைய தளத்தில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவுசெய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில், ‘Application for retotalling/Revaluation’ என்ற தலைப்பில் கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்திசெய்த விண்ணப்பத்தை இரு நகல்கள் எடுத்து, வரும் நவம்பர் 15-ம் தேதி காலை 10 மணி முதல் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தையும் பணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.