தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசுபள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களைநிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம்விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலிஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசுமேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி,நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் நுழைவுச்சீட்டு பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பங்கேற்றனர். “கேள்வித்தாள் கடினமாக இல்லை,அதே வேளையில் சுலபமாகவும் இல்லை” என தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1 காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரஅடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில்சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துவதுஇதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிவழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.