பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம்( நவம்பர் ) 2 -ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நேரில் செல்லலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | DOWNLOAD
Related Stories
April 5, 2024
February 20, 2024