NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in
NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் நேரு யுவகேந்திரா இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் தன்னார்வலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- நேரு யுவகேந்திரா அமைப்பு 1972-ல் தொடங்கப்பட்டது. 1987-ல் நேரு யுவகேந்திரா சங்கேதன் என்ற பெயர் மாற்றத்துடன், தன்னாட்சி அமைப்பாக செயல்பட ஆரம்பித்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது. இளைஞர் மேம்பாட்டிற்காக செயல்படும் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக இது விளங்குகிறது. தன்னார்வத்துடன் கூடிய பல்வேறு சமூக பணிகளில் இந்த அமைப்பு பங்களிப்பு செய்கிறது. தற்போது இந்த அமைப்பில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தன்னாா்வலா்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. மொத்தம் 12 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்… வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 3-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். மார்ச் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 15-ந் தேதி தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் மார்ச் 18-ந் தேதிக்குள் தன்னார் வலர் பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் தேசத்தின் பல்வேறு அரசு திட்டப்பணிகளின்போது தன்னார்வலர்களாக பணி செய்யலாம். பணிக்கான மதிப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இது பற்றிய விவரங்களை www.nyks.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.